குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த இடமாக இருந்ததால் இத்தலம் 'திருத்தண்கா' என்ற பெயர் பெற்றது. தண்-குளிர்ச்சி, கா-சோலை. ஒருசமயம் பிரம்மா யாகம் ஒன்றை செய்தபோது, அசுரர்கள் யாகத்தைக் கெடுக்க உலகம் முழுவதையும் இருட்டாக்கினர். அவ்போது பெருமாள் பேரொளியாகத் தோன்றி இருட்டைப் போக்கியதால் 'தீபப்பிரகாசர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் விளக்கொளிப் பெருமாள், தீபப்பிரகாசர் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு மரகதவல்லி என்னும் திருநாமம். சரஸ்வதிக்கு பகவான் பிரத்யக்ஷம்.
தூப்புல் வேதாந்த தேசிகனின் அவதார ஸ்தலம். கோயிலுக்கு வெளியே தெற்கு நோக்கி ஸ்வாமி தேசிகன் சன்னதியும், அவரது திருவாராதனப் பெருமாளான ஸ்ரீலக்ஷ்மி ஹயக்கிரீவரும் எழுந்தருளியிருக்கின்றனர்.
திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|